Categories
உலக செய்திகள்

அமெரிக்க தேர்தலில் இந்துக்களின் வாக்குகள்…… மொத்தமாக அள்ள திட்டமிடும் வேட்பாளர்கள்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்துக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகையின் படி, ஒரு சதவீதம் பேர் இந்துக்களாக இருக்கின்றனர். ஆனால் அமெரிக்க அரசியலில் இந்துக்களுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. அதன் அடையாளமாக வருகின்ற நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்து சமூகத்தின் வாக்குகளை கவரும் விதத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் இந்துக்களுக்கு மத சுதந்திரங்களுக்கான தடைகளை குறைக்கும் என ட்ரம்பின் பிரச்சார குழு உறுதி அளித்திருக்கிறது. அதனைப்போலவே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இந்து நம்பிக்கை சமூகத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக அவரது பிரசார குழு அறிவித்துள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் அமெரிக்காவின் பிரபல இந்து தலைவர் நீலிமா கோனுகுண்டாலா கலந்துகொண்டு வேத மந்திரங்களை படித்துள்ளார். அதே சமயத்தில் அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக “டிரம்ப்க்கான இந்து குரல்கள்” என்கின்ற அமைப்பை டிரம்ப் பிரசார குழு தொடங்கியிருக்கிறது.

Categories

Tech |