Categories
மாநில செய்திகள்

“அரசு கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு உதவும்”… முதலமைச்சர் பழனிசாமி உறுதி…!!

கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவில்லாமல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆங்காங்கே நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசிடம் இருந்து நிதி மாநில அரசிடம் வந்ததும், 600 கோடி ரூபாய் செலவில் ராணிப் பேட்டை குரோமியம் தொழிற்சாலையில் உள்ள குரோமிய கழிவுகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என கூறினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6,990 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 117 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். மேலும் முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், 11 துறைகளின் சார்பில், கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேருக்கு 86 கோடி ரூபாய் மதிப்பில்லான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். கடைசியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இதுதவிர, மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற நடத்திய கலந்தாய்வு கூட்டத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்பித்தார்.

Categories

Tech |