Categories
உலக செய்திகள்

சுகாதாரம் குறித்த தவறான தகவல்கள்… 308 கோடி பார்வையை அள்ளிய பேஸ்புக்…!!!

பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்களை கடந்த ஆண்டில் 308 கோடி முறைகள் பார்க்கப்பட்டிருப்பதாக ஆர்வலர்கள் குழு கூறியுள்ளது.

சமூக வலைத்தளமான பேஸ்புக் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பேஸ்புக் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்திய ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு, தங்கள் ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” ஃபேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் கடந்த ஆண்டில் 308 கோடி முறைகள் பார்க்கப்பட்டுள்ளன. இது கொரோனா நெருக்கடியின்போது உயர்ந்துள்ளது” என்று கூறியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் பரவிக் கொண்டிருக்கும் தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்களால் தடுப்பூசி போட தயாராக இருக்கின்ற மக்கள் தங்கள் முடிவை மாற்ற வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் கொரோனா தொடர்பான 9.8 கோடி தவறான தகவல்களுக்கு எச்சரிக்கை முத்திரையைப் பயன்படுத்தி இருக்கின்றோம். அதுமட்டுமன்றி உடனடியாக தீங்கு விளைவிக்கும் 70 லட்சம் தவறான தகவல்களை அகற்றியுள்ளோம் என்று அவாஸ் ஆர்வலர்கள் குழு கூறியுள்ளது. சுகாதார அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெறக்கூடிய வகையில் 200 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உதவி செய்திருக்கிறோம். கொரோனா பற்றிய இணைப்பை யாராவது பகிர்ந்து கொள்ள முயற்சி செய்தால், அவர்களை நம்பகமான சுகாதார தகவலுடன் இணைக்க வழி வகை செய்திருக்கிறோம் என்று அவாஸ் என்ற ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |