ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு பல கெடுதல் இருப்பதாக மனுதாரர் வாதாடிய நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக வகுப்புகளை குறைக்க வேண்டும் என யோசனை கொடுத்துள்ள சென்னை – உயர்நீதிமன்றம், வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கவும், மாதத் தேர்வுகளை தள்ளி வைக்கவும் கூறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா போன்றோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து பேசப்பட்டது. அதில் தொடர்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பதால் மாணவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற நோய் வர அதிக வாய்ப்பிருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அதுகுறித்து வாதாடினார். எனவே அரசு பள்ளிகளை போலவே தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், தனியார் பள்ளிகளில் இது சாத்தியமான ஒன்று அல்ல என கூறி, இதுதொடர்பான வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து விட்டனர்.