அமெரிக்காவில் இந்த வருடத்தில் மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கப்பட்டிருப்பதாக டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது.
சீனாவின் பைனான்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள டிக் டாக் செயலி, அதனை பயன்படுத்துபவர்களின் விவரங்களை தானாகவே அபகரித்துக் கொள்வதால், இந்தியா கடந்த மாதம் டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம், டிக் டாக் செயலிக்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் ஆகியவை டிக் டாக் செயலி மூலமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்துக்கொள்ள முயற்சி செய்வதாகவும், அதன் மூலம் அமெரிக்க மக்கள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், மிரட்டவும் இயலும். இத்தகைய அச்சுறுத்தல்கள் ஆல் டிக் டாக் செயலி முழுமையாக தடை விதித்து உத்தரவிடுகிறேன் என இந்த மாதத்தின் தொடக்கத்தில் ட்ரம்ப் கூறியிருந்தார். மேலும் இந்த தடை உத்தரவை அடுத்த 45 நாட்களிலிருந்து நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில், தங்கள் நிறுவனத்தின் வெறுப்பு பேசிக் கொள்கையை மீறும் வகையிலான 3,80,000 வீடியோக்களை இந்த ஆண்டு டிக் டாக் நிறுவனம் நீக்கியுள்ளதாக கூறியுள்ளது. இனவெறி அடிப்படையிலான துன்புறுத்தல்களை கொண்ட மற்றும் அடிமைத்தனம் போன்ற விஷயங்களை உள்ளடக்கிய பதிவுகள் தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் விஷயங்களாக கருதப்படுகின்றன. இடத்தில் கட்டமைக்கப்பட்ட குழுக்களுக்கு அனுமதி கிடையாது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதே சமயத்தில் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை வெளியிட்ட 1,300 கணக்குகள் மூடப்பட்டிருப்பதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.