அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 இலட்சத்தை எட்டியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித இழப்புக்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57 இலட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை கடந்துள்ளது.
அங்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கலிபோர்னியா மாகாணத்தில் 6.40 லட்சம் பேரும், ப்ளோரிடாவில் 5.84 லட்சம் பேரும், டெக்ஸாஸில் 5.69 லட்சம் பேரும் மற்றும் நியூயார்க்கில் 4.26 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜார்ஜியா, இல்லினாய்ஸ், அரிசோனா மற்றும் நியூஜெர்ஸி ஆகிய மாகாணங்கள் 1.80 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மாகாணங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக கொரோனா தரவு மையம் கூறியுள்ளது.