பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35
லட்சத்தை எட்டியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசிலில் ஒரே நாளில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்தை எட்டியுள்ளது.
மேலும் ஒரே நாளில் 1,230 க்கும் மேற்பட்டோர் பலியானதாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.12 லட்சத்தை கடந்துள்ளது. அதே சமயத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26.5 லட்சமாக இருக்கின்றது.