மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.25 கோடியை எட்டியுள்ளது. மேலும் 7.90 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 1.50 கோடிக்கும் மேலான குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ ஏழாவது இடத்தில் இருக்கின்றது.
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மெக்சிகோவில் பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.37 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 3.67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மேலும் 1.11 லட்சத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது