Categories
மாநில செய்திகள்

“சாப்பாடு வேணும்” கேட்ட தாய்… உணவுடன் சென்ற மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது தாய்க்காக இரவு உணவு கொண்டு வந்த மகன் தாய் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான்.

கிழக்கு டெல்லி பகுதியை சேர்ந்தவர் மம்தா, இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் கணவருடன் விவாகரத்து கோரிய நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து மம்தா, பிரம்மா சிங் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் பாட்டியுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு தனக்கு சாப்பிட உணவு வேண்டும் என மகனுக்கு போன் செய்துள்ளார். பின்பு பாட்டி வீட்டிலிருந்து உணவுடன் மகன் வந்தபோது கழுத்துப் பகுதி வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் தாய் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் மம்தாவின் சடலத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக மம்தாவின் மகன் மற்றும் குடும்பத்தார் காவல்துறையினரிடம் பிரம்மா சிங் தான் இவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான் என்று கூறியுள்ளனர். அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மம்தாவிற்கு ஊரடங்கு சமயத்தில்தான் பிரம்மா பழக்கமானார். ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது இதைதொடர்ந்து மம்தாவை மணந்து கொள்வதாக அவருக்கு சத்தியம் செய்திருந்தார் என்று கூறியுள்ளனர். இதைதொடர்ந்து தலைமறைவாகியுள்ள பிரம்மாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |