பிளஸ்-2விற்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம் நிறைவு பெற்றது . இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில் இறுதி தேர்வை முடிக்க பள்ளிக்கல்விதுறை உத்தரவுவிட்டனர்.
அந்த உத்தரவின்படி 1 முதல் 9 வகுப்பிற்கு நேற்றோடு இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள்ளில் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட இருப்பதாகவும் , ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பாக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கதினை பொறுத்து பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளிப்போகலாம் என்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.