கொரோனா அச்சத்தால் இரு நாட்டு அதிபர்கள் கை குலுக்காமல், வணக்கம் தெரிவித்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது கைகுலுக்கி கொள்வது வழக்கம். ஆனால் கொரோனா அச்சத்தால், அந்த வழக்கம் தற்ப்போது மாறுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரேசில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பில், சமூக இடைவெளியை பின்பற்றி வணக்கம் செலுத்தும் முறையை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் கூறுகையில், ” கை குலுக்குவதை அனைவரும் தவிருங்கள். வணக்கம் கூறும் இந்திய நடை முறையை அமல்படுத்த முயற்சி செய்யுங்கள். என்னைப் போன்று அனைவரும் வணக்கம் சொல்லுங்கள். அல்லது கை கொடுக்காமல் ஏதேனும் வேறு வழியை பின்பற்றுங்கள்” என்று அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஐரிஷ் நாட்டு பிரதமர் லியோ வராட்கருக்கு வரவேற்பு அளிக்கும் போது, அமெரிக்க ஜனாதிபதி வணக்கம் சொல்லும் முறையைப் பின்பற்றியுள்ளார். இதனைப் போன்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் லண்டனில் மக்களை சந்திக்கும் போது வணக்கம் தெரிவித்த வீடியோ சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதனைப் போலவே ஜெர்மன் நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற போது, அவரை வரவேற்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய கலாச்சார முறையைப் பின்பற்றி வணக்கம் செலுத்தியுள்ளார். பதிலுக்கு ஜெர்மன் அதிபரும் வணக்கம் கூறியுள்ளார். மேலும் பிரான்ஸ் அதிபரின் உங்கள் இல்லத்தில் நடைபெறுகின்ற சந்திப்பில், கொரோனா பாதிப்பு, பெலாரஸ் நாட்டில் தேர்தலுக்கு பின்னான அமைதியின்மை மற்றும் துருக்கி நாட்டுடனான பதற்றநிலை ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.