Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் 100ஐ கடந்த பலி எண்ணிக்கை…அச்சத்தில் ஆழ்ந்த தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 101 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,995 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,282 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,22,757 ஆக எகிறியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,764 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், தற்போது வரை 3,07,677 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 53,413 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 19 ஆவது நாளாக உயிரிழப்பு 100ஐ கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |