Categories
உலக செய்திகள்

“தனிமைப்படுத்தப்பட்ட நண்பர்” நாடு திரும்பியவர் செய்த செயல்…. சிறையில் அடைத்த நீதிமன்றம்…!!

நியூசிலாந்தில் நண்பரை கட்டியணைத்து குற்றத்திற்காக வெல்ஷ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்த மாத துவக்கத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய வெல்ஷ்ன் என்பவர்  தனிமைப்படுத்தப்பட்டிருந்த தனது நண்பரை பார்க்க ஆக்லாந்தில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர்  தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு சென்றதே விதிமீறல். ஆனால் அதன்பின் தனது நண்பரை கட்டிப்பிடித்து அதன்மூலம் இந்த விஷயத்தை மிகவும் பெரிதாக்கிவிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனிமைப்படுத்தப்பட்ட விதிகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும், நண்பருடன் பேசியது மட்டுமல்லாமல் அவரை கட்டிப்பிடித்துள்ளீர்கள் என்று கூறினார்.

தனது கட்சிக்காரர் தன்னுடைய செயலுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதாகவும், உண்மையில் இது முட்டாள்தனமான செயல் என்று ஒப்புக் கொண்டதாகவும் வெல்ஷனின் வழக்கறிஞர் கூறினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடுமையான எல்லை கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில்  வைரஸை ஏறக்குறைய அகற்றிய பெருமை நியூசிலாந்திற்கு இருந்தது. இருப்பினும் இந்த மாத தொடக்கத்தில் புதிய கொரோனா தொற்று  பரவலை கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |