Categories
தேசிய செய்திகள்

விமான நிலையத்தை அதானியிடம் ஒப்படைக்க கேரள அரசு மறுப்பு…!

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க கேரளாவில் பாரதிய ஜனதா தவிர்த்த பிற கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரள முதல்வர் பினராய் விஜயன் காணொளி வாயிலாக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைப்பது கேரள மக்களின் விருப்பங்களுக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்து. மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் ஒரு வெளிப்படையான நடைமுறையில் தகுதியான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்திருக்கிறார். மத்திய அரசின் முடிவை ஆதரித்து உள்ள காங்கிரஸ் சேர்ந்தவரும் திருவனந்தபுரம் எம்பியுமான தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு விமான நிலையத்தின் தரத்தை உயர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |