வட கொரிய அதிபர் ஆட்சி அதிகாரத்தை தன் தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்(38) உடல்நிலை பற்றியும், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு செய்திகள் வெளியாகின. அச்சமயத்தில் அவரின் தங்கை வடகொரிய ஆட்சியை நிர்வகித்து வந்துள்ளார். அதன்பின்னர் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் இருக்கின்ற சஞ்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாண்டமான உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் அவர் தனது சகோதரியுடன் பங்கேற்றார்.
இதனைத்தொடர்ந்து வடகொரிய ஆட்சியில் தனது சகோதரி கிம் யோ ஜாங்க்(31) பொறுப்பு வகிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான புதிய கொள்கையை அறிவித்து தன்னுடைய அனைத்து அதிகாரத்தையும் தனது தங்கைக்கு பகிர அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.