Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஸெல் விளையாடுவாரா..? வெற்றி பயணம் தொடருமா…. CSK VS KKR பலப்பரீட்சை..!!

ஐ.பி.எல்லில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன 

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 7 போட்டிகள் விளையாடி 6 வெற்றியும், 1 தோல்வியுடனும் 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் கடைசி பந்தில்  சென்னை அணி சிக்ஸர் மூலம் த்ரில் வேற்றி பெற்றது. அப்போட்டியில் கடைசி ஓவரில் நோபால் வீசியதால் நடுவரிடம் வாக்குவாதம் செய்த தோனிக்கு அபராதம்  விதிக்கப்பட்டது. அதனால் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. தன் மீதுள்ள விமர்சனங்களையெல்லாம் புறம் தள்ளி விட்டு தோனி  வெற்றி பயணத்தை  தொடர முனைப்பு காட்டுவார்.

கொல்கத்தா அணி இதுவரையில் 7 போட்டிகள் விளையாடி 4 வெற்றியும் 3 தோல்வியும் பெற்று 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் 108 ரன்னில் சுருண்டது. அதில் சென்னை அணி வென்றது. கொல்கத்தா அணி கடந்த 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது. அந்த அணியில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸெல் விளையாடிய 6 போட்டியிலும் 40 ரன்களுக்கு மேல் குவித்து 29 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார். ரஸெளுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்படும் கடந்த சில ஆட்டங்களில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா? என்று கேள்வி குறியாக உள்ளது. ரஸெல் விளையாடவில்லை என்றால் கொல்கத்தாவுக்கு பெரும் பின்னடைவு என்றே சொல்லலாம். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால் ரன் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் இதுவரையில் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை  அணி 12 வெற்றியும், கொல்கத்தா அணி 7 வெற்றியும் பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை 8 முறை மோதியுள்ளது. இதில் இரு அணிகளும் 4 வெற்றி என்ற சம நிலையில் உள்ளது.

Categories

Tech |