மீன ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய மனதில் உருவான திட்டம் செயல் வடிவம் பெறும். விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்க தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். மனைவி பாசத்துடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் இருந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.
தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். மனமும் திருப்திகரமான சூழ்நிலையில் இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்தி உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தை பெறுவீர்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் வந்து சேரும். அதேபோல் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். ஆனால் நீங்கள் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் கொடுக்காதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பதை ரொம்ப நல்லது.
கொடுக்கல் வாங்கலும் பொருத்தவரைக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லையே சமூகமாகவே இருக்கும். இன்று காதலர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயக பெருமானை வழிபட்டு அருளை பெறுங்கள் .
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.