Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்… பெரும் தலைவர்கள் வாழ்த்து…!!

நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரும் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்,” விநாயகர் சதுர்த்தி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடு” இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள செய்தியில், “பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் இதன் அடையாளமாக இருந்தாலும், கொரோனா பரவி வருவதால் இந்தாண்டு கொண்டாட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்”  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்,” விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல் நலம் ஆகியவற்றை வழங்கட்டும்” இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.மேலும் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள வாழ்த்து அறிக்கையில்,” விநாயக பெருமானின் திருவருளால் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” இவ்வாறு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |