Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சம்” மாறிப்போன கலாச்சாரம்…. வைரலாகும் காணொளி…!!

ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆலோசனைக் கூட்டத்தின்போது இருநாட்டு அதிபர்களும் கைகுவித்து வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

 

உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. மேலும் அவர்களின் செயல்பாடுகளையும் தலைகீழாக மாற்றிவிட்டது. பலநாடுகளில் இதுவரையிலும் தொற்றினை தடுப்பதற்காக ஊரடங்குகள் நடைமுறையில் உள்ளது. பல்வேறு உலக தலைவர்களின் முக்கியமான கூட்டங்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களை சந்திப்பது போன்றவை பல கட்டுப்பாடுகளுடனே நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இருவரும் பாரிஸில் முக்கிய சந்திப்பில் கலந்துகொண்டனர். அப்போது இருவரும் தங்கள் கைகளை குறுக்கிக் கொள்ளாமல் தங்களின் இரு கரங்களையும் குவித்து வணங்கி வரவேற்று கொண்டனர். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பிரான்ஸ் அதிபர் பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளத்தில் இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. ஜெர்மன்- பிரான்ஸ் ஆகிய இரு நாடுகள் இடையே உள்ள இருதரப்பு உறவு குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டின் ஊடகச் செய்திகள் வெளியிட்டுள்ளனர்..

Categories

Tech |