Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை இருளில் தள்ளிய டிரம்ப்… ஜோ பைடனின் ஆவேச உரை…!!!

அமெரிக்காவில் நடந்த கட்சி மாநாட்டில், அமெரிக்காவை டிரம்ப் வெகுகாலம் இருளில் தள்ளி விட்டார் என ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக பிரபா மாகாணத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போட்டியிடவுள்ளார். ஜோ பைடனை முறைப்படி வேட்பாளராக அறிவிக்கும் கட்சி மாநாடு, டெலவாரே மாகாணத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் வேட்பாளராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட ஜோ பைடன் ஆவேச உரையாற்றியுள்ளார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில், ” ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவை நீண்ட காலமாக இருளில் தள்ளிவிட்டார். அவர் அதிக கோபம், அதிக பயம் மற்றும் அதிகப்படியான பிரிவினை ஆகியவற்றை கட்டவிழ்த்து விட்டார். அவரைப்போல் நான் இல்லை.’ நான் இருளின் கூட்டாளி அல்ல, ஒளியின் கூட்டாளி’. இந்த மாநாட்டின் மூலமாக நான் உங்களுக்கு எனது வார்த்தைகள் மூலம் வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் ஜனாதிபதி பதவியை என்னிடம் ஒப்படைத்தார், நான் நம்மில் மிக சிறந்த ஈர்ப்பேன். மோசமானது அல்ல. நமக்கான நேரம் வந்திருக்கிறது. நாம் ஒன்றுபடுவோம்.

எந்த ஒரு தவறும் செய்யாமல், நாம் அனைவரும் ஒன்றுபட்டு அமெரிக்காவின் இந்த இருளான காலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். நடைபெறுகின்ற தேர்தல் வாழ்க்கையை மாற்றி அமைக்க உள்ள முக்கியமான தேர்தல். அது நீண்ட காலத்திற்கு அமெரிக்கா எப்படி இருக்கப்போகிறது என்பதை தீர்மானம் செய்யக்கூடிய தேர்தல்” என்று அவர் கூறியுள்ளார். அதேசமயத்தில் ஜோ பைடன், தனது மனைவி ஜில், துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் கணவர் டக் எம்ஹாப்புடன் மேடையில் உற்சாகமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |