வடகொரிய அதிபர் தன் சகோதரிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கி சிறப்பித்துள்ளார்.
வடகொரிய நாட்டில் கிம் ஜாங் அன் குடும்பத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் சிலநாட்களாக அதிபரின் தங்கை கிம் யோ ஜாங், செல்வாக்கு பெருமளவு பெருகியுள்ளது. அவர் அமெரிக்க மற்றும் தென்கொரிய தொடர்பான கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அதிபர் கிம் ஜாங் அன், அவரின் சகோதரி மற்றும் வேறுசில உதவியாளர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளார்.
ஆனால் தென் கொரிய தலைநகர் சியோலில் மூடிய அரங்கத்தில் நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில், ” கிம் ஜாங் அன் முழுமையாக வடகொரியாவை ஆட்சி செய்கிறார். அவருக்கு உடலில் கோளாறுகள் இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. அதனைப் போன்றே தனது தங்கையை வாரிசாக கொண்டு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று உளவுத் துறையினர் கூறியுள்ளனர். இருந்தாலும் அதிபரின் தங்கை நாட்டின் ஒட்டுமொத்த விவகாரங்களையும் வழி நடத்தி வருவதாக தென் கொரிய உளவுத்துறை கூறியுள்ளது.