தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்கு கேட்டு தேனி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் பிரதமர் மோடி தோல்வி பயத்தில் பிரச்சாரம் செய்வதாக விமர்சித்தார். மேலும் பிரதமர் மோடி பேசாத சில விசயங்கள் என்று தனது டீவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நெடுவாசல் எரிவாயு சோதனைத் திட்டம் , அதிமுக அரசு மீது பதிவான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் அவர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தில் , உண்மையான சாதனைகளான, பணமதிப்பிழப்பு, சிறுகுறு தொழில் அழிப்பு, 4.7 கோடி வேலைகள் இழப்பு, பெண்கள், சிறுபான்மையினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தலித்துகளுக்கு பாதுகாப்பின்மை பற்றி பேசுவாரா என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் .
தமிழ்நாட்டில் நேற்று பேசிய திரு மோடி பேசாத பொருள்களைப் பட்டியலிடுங்கள்
1. நீட் தேர்வு
2. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
3. நெடுவாசல் எரிவாயு சோதனைத் திட்டம்
4. அஇஅதிமுக அரசு மீது பதிவான ஊழல் குற்றச்சாட்டுக்கள்— P. Chidambaram (@PChidambaram_IN) April 14, 2019