ஜார்கண்டில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்டில் ராஜேந்திரா என்ற மருத்துவ அறிவியல் மையம் ராஞ்சி நகரில் இருக்கின்றது. அதில் கார்வா மாவட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய வாலிபர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா வார்டின் படிக்கட்டு பகுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொரோனா நோயாளியின் உடலை கைப்பற்றினர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று அறிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.