முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை கூறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்த ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்றதால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருக்கின்றனர்.
அவரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் அவரின் உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி வென்டிலேட்டர் மூலமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து, அதற்கு உரிய சிகிச்சைகளை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.