Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(23.08.2020)நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

23-08-2020, ஆவணி 07, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00

எம கண்டம் – பகல் 12.00 – 01.30

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30

நாளைய ராசிப்பலன் –  23.08.2020

மேஷம்

எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும்.

மிதுனம்

குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

கடகம்

பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும்.

சிம்மம்

செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கன்னி

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள்.

துலாம்

உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் மூலம் மகிழச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும்.

விருச்சிகம்

வரவும் செலவும் சமமாகவே இருக்கும். பணவரவில் சில தடங்கல்கள் ஏற்படலாம்.  திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு

சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத உதவி கிடைக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். வெளிப் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

மகரம்

பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கும்பம்

பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும்.  புதிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். மனநிம்மதி உண்டாகும்.

மீனம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

Categories

Tech |