ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கொரோனா எப்போது சரிஆகுமென கூறியுள்ளார்.
உலகெங்கும் கொரோனா நோய்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக் கொண்டே இருக்கின்றது. உலகெங்கிலுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்குள் முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.உலகமயமாக்கல் காரணமாக உலகம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.உலகமயமாக்கல் காரணமாக நாம் சில சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம். அதில் இக்கொரோனா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நோயின் விளைவாக உலகம் முழுவதிலும் தற்போதுவரை 2 கோடியே 31 லட்சத்து 41 ஆயிரத்து 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 556 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் தடுப்பு மருந்துகளை விரைவாக கண்டு பிடிப்பதன் மூலம் 1918ஆம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் ஃப்ளு வை விட மிகக் குறுகிய காலத்தில் கொரோனா பரவலை தடுக்க இயலும் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் கண்டறியப்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு வானது இதுவரையில் 50 கோடி பேர் மக்களை பாதிப்படையச் செய்துள்ளது. இந்நிகழ்வானது முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட 5 மடங்கு அதிகமாகும்.