Categories
மாநில செய்திகள்

“ஊரடங்கு அத்துமீறல்”… 10 லட்சத்தை எட்டிய கைது எண்ணிக்கை…!!

ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டங்களில் தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களின் கைதான எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை அத்துமீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றி வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஓட்டிச் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதுவரை தமிழகம் முழுவதும், 9 லட்சத்து 83 ஆயிரத்து 649 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடப்பட்டுள்ளனர். மேலும் 8,89,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,88,234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரூ.21,19,57,003 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |