அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காதலனின் வார்டுக்கே சென்று இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக முடிவு செய்யப்பட்ட திருமணங்கள், தற்போது நடத்த முடியாமலும், சில திருமணங்கள் குறைவான உறவினர்களுடனும் எளிமையாக நடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதலனை, கொரோனா வார்டுக்கு சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் கார்லேஸ் முனீஸ் என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு அதன் மூலமாக சுவாசித்து வந்துள்ளார். இருந்தாலும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி அவரின் காதலி கிரேஸ் என்பவர், தனது காதலனுடன் கை கோர்க்க விரும்பியுள்ளார்.
அதன் பிறகு நேரடியாக மருத்துவமனைக்கே சென்று, அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கார்லேஸ் கொரோனா வீட்டில் இருந்து குணமடைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவருடைய உண்மையான காதலை அவர் விரைவில் குணமடைவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.