உதவும் மனப்பான்மை கொண்ட சிறுமி விபத்தில் உயிர் இழந்ததால் அவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
பிரித்தானியாவில் கடந்த 10ஆம் தேதி பியூரி நகரில் 11 வயது சிறுமி சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் சிறுமியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமி ராயல் மான்சிஸ்டர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் மரணத்தால் அவரின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் “கூறுகையில் ரூபியின் இழப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த இளம் வயதிலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவள். தற்போதும் தனது உடல் உறுப்புகளை தானம் செய்து அவளின் கொள்கையை அவள் தொடர்ந்திருக்கிறாள்” என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் பல தகவல்களை எதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பான தகவலை அல்லது வீடியோ காட்சிகளை யாரிடமாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.