தமிழகத்தில் இன்று மேலும் 5,980 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் மேலும் 5,980 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 5,603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,13,280 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 71,679 பேருக்கு செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 39,95,513 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 53,710 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.