மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடத்தலாம் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
வருடம்தோறும் எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கேட் தேர்வு,மேட் தேர்வு, மற்றும் பல்வேறு பொது நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் அடிப்படையில் தான் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதேசமயம் இப்போது உள்ள காலகட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக, நுழைவுத்தேர்வுகள் நடத்துவதிலும் மற்றும் ரத்து செய்வதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.இந்த நிலையை கருத்தில் கொண்டு எம்.பி.ஏ., முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்புகளுக்கு இந்த வருடம் மட்டும் இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு செய்து, மாணவர் சேர்க்கை நடத்தலாம். மேலும் மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்.