Categories
மாநில செய்திகள்

ஆறு மாசம் சம்பளம் இல்ல… “உடல் உறுப்பை விற்க அனுமதி வேணும்”… மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நபர்…!!

குடும்ப வறுமை காரணமாக தனது உடல் உறுப்பை விற்பனை செய்ய அனுமதி தாருங்கள் என போக்குவரத்து ஊழியர் ஒருவர் மனு கொடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தத்தின் பேரில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தமிழ்ச்செல்வம் தனது குடும்ப வறுமை காரணமாக உடல்  உறுப்பை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். சென்ற 6 மாத காலமாக சம்பளம் கொடுக்காததால், பல சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக அவர் மனுவில் வெளிப்படுத்தி கூறியிருந்தார்.

தமிழ்ச்செல்வம் அளித்த மனுவை குறித்து தகவல் அறிந்த தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறினர். நிலுவை சம்பளம் வழங்குவது பற்றி முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து தாங்கள் பேசுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்து சென்றனர்.

Categories

Tech |