Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து தடை வேண்டாம்”… மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்…!!

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தகவல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை.

மாநில அரசுகளின் இந்த செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது” இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |