சிம்ம ராசி அன்பர்களே…! இன்று கருணையால் உறவினர்களுக்கு உதவுவதற்கு முன் வருவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். புதிய வாகனம் வாங்க யோகம் இருக்கும். பெண்கள் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்க கூடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாகவே பணியாற்ற வேண்டி இருக்கும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டியிருக்கும். பணவரவு இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் என்பது வேண்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது ரொம்ப நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். அதே போல உங்களுடைய வேலைகளை நீங்கள் மட்டும் செய்ய வேண்டும் மற்றவரிடம் தயவு செய்து ஈடுபடுத்த வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் தயவுசெய்து அலட்சியம் ஏதும் காட்ட வேண்டாம். காதலர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள், தேவையில்லாத விஷயங்களில் வாக்கு வாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.