Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…சீரான வளர்ச்சி இருக்கும்…தொந்தரவு கொஞ்சம் ஏற்பட்டு…!

துலாம் ராசி அன்பர்களே…!   இன்று சுற்றுப்புற சூழ்நிலைகளால் தொந்தரவு கொஞ்சம் ஏற்படலாம். நல்ல பெயரை பாதுகாப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். பெண்கள் நிர்பந்தத்தின் பேரில் கடன் வாங்க வேண்டாம். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் எல்லாம் கைகூடும். பயணிகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும்.

உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுதும், ஆயுதம் நெருப்பு இவைகளை கையாளும் பொழுது கவனம் வேண்டும். சமையல் அறையில் பெண்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். காதலர்களுக்கு சிரமமான சூழல் இருக்கும். பேச்சில் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அது போலவே கணவன் மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

மனதை எப்பொழுதும் நிம்மதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரோம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம் .

Categories

Tech |