மேற்கு வங்காளத்தில் ஒரே நாளில் மட்டும் 3,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் முதலில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டதால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,596 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,737 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தற்போது வரை 1,04,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27,900 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.