தலைவரை நியமிக்க நாளை காங்கிரஸ் கட்சி கூட்டம் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கி சரியான வழியில் நடத்திச் செல்வது யார் என்பது குறித்து விவாதிக்க நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சியினுடைய கமிட்டி கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற இருக்கிறது. இந்த காணொளி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, போன்ற காங்கிரஸ் கட்சியினுடைய முதன்மையான தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்திருக்கிறார். மேலும் நாளை நடைபெறவிருக்கும் இந்த கட்சியின் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலை மற்றும் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.