Categories
உலக செய்திகள்

என்னது! கொரோனா முடிய இன்னும் இரண்டு ஆண்டா?…என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க…!!!

கொரோனா வைரஸை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா விற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள போதும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குள் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறியுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ” உலகமயமாதல், நெருக்கம் மற்றும் தொடர்பில் இருத்தல் ஆகியவை நமக்கு குறைபாடுகளாக இருக்கின்றன. இருந்தாலும் நம்மிடம் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரிய நன்மை இருக்கின்றது. அதனால் இந்தக் கொரோனாவைரஸை நாம் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். தற்போது இருக்கின்ற யுத்திகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமன்றி கொரோனாவுக்கு கூடுதலாக தடுப்பூசி கிடைத்தால் நாம் இந்த வைரஸை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரலாம்.

இதனைப் போன்றே 1918 ஆம் ஆண்டு உருவான ஸ்பானிஷ் என்ற வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்தது. அந்த ஸ்பானிஷ் புளூவுக்கு உலகம் முழுவதும் ஐந்து கோடிக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். அந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தது. அதன் பிறகுதான் இந்த கொடிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல உலகம் பழைய நிலைமைக்கு திரும்பியது. அதனைப் போலவே இந்த கொடிய கொரோனா வைரஸையும் விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |