Categories
உலக செய்திகள்

முடிவுக்கு இந்தியாவின் வீடு கட்டும் பணி…இலங்கையின் இந்திய தூதரகம் தகவல்…!!!

இந்திய திட்டத்தின் கீழ் இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி முடிவடைந்துள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இந்தியா வீட்டுவசதி திட்டங்களை இலங்கையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின் கீழ் மன்னார் பிராந்தியத்தில் 50,000 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு தோட்டப் பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இவற்றைத் தவிர இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3000 வீடுகள் என்ற வகையில் மொத்தம் 63 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டி வருகின்றது.

இந்நிலையில் மன்னார் பிராந்தியத்தில் 50,000 வீடுகளை கட்டும் இந்தியாவின் வீட்டு வசதி திட்டம், ஓரளவிற்கு முடிந்துவிட்டதாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.

Categories

Tech |