மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி இங்கிலாந்து ஏல மையத்தில் ரூ. 2.25 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக பெரிதும் போராடிய மகாத்மா காந்தி, வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டவர். அவர் உபயோகித்த தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் ஒருவரிடம் இருந்துள்ளது. அவரின் உறவினர் ஒருவர் 1910 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரையில் தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்து பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அப்போது அந்த மூக்கு கண்ணாடியை மகாத்மா காந்தி அவருக்கு அதனை பரிசாக அளித்ததாகவும் அந்த முதியவர் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அந்த மூக்கு கண்ணாடி இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கின்ற ஹன்ஹாம் என்ற இடத்தில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் என்ற ஏல மையத்தில் ஆன்லைன் மூலமாக தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த மூக்கு கண்ணாடி பத்தாயிரம் டாலர்கள் முதல் 15,000 டாலர்கள் வரை ஏலம் போகலாம் என அந்த நிறுவனம் பெரிதும் எதிர்பார்த்து இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக, அனைத்து விதமான சாதனைகளையும் முறியடிக்க கூடிய விதத்தில் அந்த மூக்கு கண்ணாடி 2 லட்சத்து 60 ஆயிரம் டாலர்கள் ஏலம் போய் இருக்கிறது.
உலகில் மிகவும் அபூர்வமான இந்த மூக்குக்கண்ணாடி யாரும் எதிர்பார்க்காத விலைக்கு விற்பனையாகி உள்ளதாக அதனை ஏலம் விட்ட நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருக்கின்ற மங்கோட்ஸ்ஸ்பீல்டூ என்ற இடத்தில் வசித்து வரும் முதியவர் ஒருவர் அந்த மூக்கு கண்ணாடியை ஏலத்தில் எடுத்துள்ளார். அவரின் பெயர் விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.