கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமெரிக்கா களிம்பு ஒன்றை கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, தற்போது பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் அமெரிக்காவில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுப்பதற்கான களிம்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் பின்னர் அந்த களிம்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பரிசோதனை கூடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்த களிம்பை மூக்கில் தடவி கொண்ட 30 வினாடிகளுக்குப் பின்னர் எந்த ஒரு வைரஸ் தொற்றும் கண்டறியவில்லை. மேலும் இந்தக் களிம்பு ‘டி3எக்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றது.
இது குறித்து அட்வான்ஸ்ட் பெனிட்ரேஷன் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிறுவனருமான மருத்துவர் பிரையன் ஹீபர் கூறுகையில்,” இந்தக் களிம்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இது பெரும்பாலான நேரங்களில் மூக்கின் வழியாக வைரஸ் பரவும் வாய்ப்பை குறைக்கின்றது. இது ஒரு மிகப்பெரிய விஷயம். இது கொரோனாவுக்கு எதிரான முதல் தற்காப்பாக இருக்கக் கூடும். இது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிக பயனுள்ள தடுப்பு மருந்து” என்று அவர் கூறியுள்ளார். இந்த மருந்தினை வாங்குவதற்கு மருத்துவ சீட்டு அவசியமில்லை. இந்த மருந்து பயன்பாட்டிற்கு வந்த பின்னர் மூக்குத் துவாரங்கள் மீது இதனை தடவிக் கொண்டால் அது வைரஸ் நுழைவதை தடுத்து விடும்.