மேஷ ராசி அன்பர்களே …! இன்று தன லாபம் பெருகி மன மகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாக உற்சாகம் பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். மற்றவருக்காக வாதாடி வெற்றியும் பெறுவீர்கள். புத்திக் கூர்மையுடன் செயல்படுவீர்கள்.
தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச் செய்தாலும் அதற்கு ஏற்றாற்போல் வரவு இருக்கும். வேண்டியவர்களுடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் இன்று கூடும். தேவையான பண உதவி கிடைப்பதிலும் புதிய ஆர்டர்கள் கிடைப்பது கொஞ்சம் தாமதமாகும்.
காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.