தன்னைக் கிண்டல் செய்தவரை வாலிபர் ஒருவர் கோபமடைந்து கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான கார்த்திபன். இவரை 38 வயதான சிதம்பரம் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் அடித்துள்ளார். இதனால் கோபமடந்த கார்த்திபன் கள்ளுக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணகுமாரின் கழுத்தை தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் கிருஷ்ணகுமார் கத்தியுள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது கிருஷ்ணகுமார் படுகாயமடைந்து இருந்தார். இதற்கிடையே கார்த்திபன் அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர் காயமடைந்த கிருஷ்ணகுமாரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் நகர காவல் துறையினர், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கார்த்திபனை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.