மகர ராசி அன்பர்களே …! அதிக உழைப்பின் காரணமாக இரவு தூக்கம் குறைவதால் உடல் நலம் கொஞ்சம் கெடலாம். அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இருக்காது. எச்சரிக்கையுடன் எதிலும் செயல்படுங்கள், அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். தொடக்கத்தில் இருந்த காரியங்கள் வெற்றி அடைவதுடன் பணவரவும் இருக்கும். உடல் சோர்வு உண்டாகலாம். முயற்சிகளில் வெற்றி இருக்கும்.
எதிர்ப்புகள் அகலும் நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். சாதகமான பலனை அடைவீர்கள். பயணங்கள் செய்வதாக இருந்தால் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். தொழில் விரிவாக்கம் பற்றிய பேச்சு வார்த்தையை இல்லத்தில் நடத்துவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
காதலர்களுக்கு இனிமையான நாளாக அமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண முயற்சியில் நல்ல வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மயில்நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மயில்நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோல இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நீலம் மற்றும் வெள்ளை.