இன்று முதல் பிளஸ்-1 படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடத்தப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்டு இருக்கின்றன. பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் சென்ற 17ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் +1 வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. மாணவர் சேர்க்கை நடைபெறும் பள்ளிகளில் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.