Categories
அரசியல் சற்றுமுன்

ராகுல் காந்தியா…. சோனியா காந்தியா…. தொடங்கியது ஆலோசனை …!!

காணொளி வாயிலாக தொடங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மிகுந்த பரபரப்பை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது.,

காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை வரவேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையும் இன்னொரு பக்கம் வந்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லாத ஒருவர் தலைவராக வர வேண்டுமா ? அல்லது காந்தி குடும்பத்திலிருந்து சோனியா காந்தி தொடர்வது அல்லது ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக இருப்பது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஆகவேதான் மிகவும் ஆர்வத்துடன் இந்த கூட்டத்தை காங்கிரஸ் தலைவர்கள் உற்றுநோக்கி கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று சோனியா காந்தி எந்த விதமான கருத்துக்களை வலியுறுத்துவார். ராகுல் காந்தி அதை ஏற்றுக்கொள்வாரா ? போன்ற விஷயங்கள் தான் மிகவும் ஆர்வமாக எதிர் பார்க்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை சோனியா காந்தி தலைவராக தொடர முடியாது என்று தெரிவித்தாலோ ? அல்லது ராகுல் காந்தி மீண்டும் நான் தலைவராக மாட்டேன் என்று தெரிவித்தாலோ ? கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் இந்த கருத்தை ஏற்றுக் கொள்வதாக இல்லை. மீண்டும் சோனியா காந்தியை தலைவராக நீடிக்க வேண்டும். அல்லது ராகுல் காந்தி திரும்பவும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பெரும்பான்மையான தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். ஆகவே தான் இந்த கூட்டம் முக்கியமாக கருதப்படுகிறது.

Categories

Tech |