கொரோனா பாதிப்பிலிருந்து பிரபல பாடகர் எஸ்பிபி முழுமையாக குணம் அடைந்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் முழுமையாக குணம் அடைந்துள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால்,
மருத்துவர்கள் மற்றும் அவர் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொண்ட பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை இந்த செய்தி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எஸ்பிபி மகன் சரண் ஆனந்த கண்ணீரோடு நன்றி தெரிவித்துள்ளார்.