Categories
தேசிய செய்திகள்

“BIG SALUTE” 15 மணி நேரம்….. 40கி.மீ…. வீரர்களால் உயிர் பிழைத்த இளம்பெண்…. குவியும் பாராட்டு….!!

உத்தரகாண்டில் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்ற ராணுவ வீரர்கள் செய்த செயல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராணுவ வீரர்கள் என்றாலே நம் மனதில் அவர்களுக்கென்று தனி மரியாதை கோவிலை கட்டி வைத்திருப்போம். அதற்கு காரணம் எல்லையில் நின்று நமது உயிரை அந்த வீரர்கள் காப்பாற்றுவதோடு, அவ்வப்போது ஊருக்குள் மக்களுக்கு தேவையான உதவிகளை மனித நேயத்துடன் செய்து வருகிறார்கள். அந்த வகையில், உத்தரகாண்டில் உள்ள லாக் சாஃப் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால்,

அந்த பெண்ணை காப்பாற்ற இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஜவான்கள் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்டெச்சரில் தூக்கியபடியே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 15 மணி நேரம் தூக்கிக்கொண்டு நடந்தே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு அப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

Categories

Tech |