Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் சேர்ந்தால் ரூபாய் 2000…திகைப்படைய செய்த அறிவிப்பு…!

அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 2000 கல்வி உதவி தொகையாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெற்றோர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது .

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 350 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.  அப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து கொண்டே வந்துள்ளது.  இதனைக் கண்ட கல்வி அதிகாரிகள் அப்பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டனர். இதனை ஆலோசனை செய்த ஆசிரியர்கள் திடீரென அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அப்பள்ளியில்  புதிதாக ஆறாம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாகவாவது அப்பள்ளியின் சேர்க்கையை அதிகரிக்கலாம் என்று ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் அப்பள்ளியில் கணினி வழிக்கல்வி, ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி, அரசு அளிக்கும் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருதல், சிறந்த நூலக வசதி, இலவச பேருந்து பயணச்சீட்டு மற்றும் நீட் பயிற்சியின் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப கட்டணத்தை பள்ளியே ஏற்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளியில் மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாடுவதற்கான பயிற்சிகள் மற்றும் யோகா  போன்றவைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் எனவும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

 

Categories

Tech |