கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களுக்கு தொடர்ந்து ஊரடங்கை நீடிக்க முடியாத பட்சத்தில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதே ஒரே வழி என்பதால்,
அதற்கான பணியில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் ஆஸ்ட்ரோ ஜெனோகா நிறுவனம் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப் பட்டுள்ள கோவிட் ஷீல்ட் என்ற தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவிக்கையில், இது நல்லபடியாக தொடர்ந்தால், இந்த ஆண்டிற்குள் தடுப்பு மருந்து கிடைத்துவிடும் அதை இலவசமாக மக்களுக்கு வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.